Byjus நிறுவனருக்கு சொந்தமான இடங்களில் திடீர் சோதனை.. முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

Byjus நிறுவனத்தின் சி.இ.ஓ. ரவீந்திரனின் வீடு, அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனையில் முக்கிய ஆவணங்கள் பரிமுதல்.

பெங்களுருவில் உள்ள பைஜூஸ் நிறுவன (Byjus) சி.இ.ஓ. ரவீந்திரனின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அந்நிய செலாவணி விதிமீறல் தொடர்பான புகாரில் திடீர் சோதனை நடைபெற்றுள்ளது.

2011-23 வரையிலான காலகட்டத்தில் பைஜூஸ் நிறுவனம் ரூ.28,000 கோடி அந்நிய நேரடி முதலீடு பெற்றதில் விதிமீறல் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 2020-21-ம் ஆண்டுக்கான நிதி விவரங்கள், கணக்குகளை பைஜூஸ் நிறுவனம் சமர்ப்பிக்கவில்லை என்றும் அமலாக்கத்துறை புகார் கூறியுள்ளது.

பைஜூஸ் நிறுவனம் வழங்கிய விவரங்களை கொண்டு உண்மை தன்மை ஆராயப்பட்டு வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த புகார் தொடர்பாக பைஜூஸ் சி.இ.ஓ. ரவிச்சந்திரனுக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டு விசாரணைக்கு ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.

எனவே, அந்நிய செலாவணி மோசடி தொடர்பான வழக்கில், பெங்களூருவில் Byjus நிறுவனர் ரவீந்திரன் தொடர்புடைய 3 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் தரவுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.