பங்குச்சந்தை சரிவு..! சென்செக்ஸ் 139 புள்ளிகள் குறைந்தது..!

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 139 புள்ளிகள் குறைந்து 59,605 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,511 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்றைய வர்த்தக நாளில் 59,777 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 139 புள்ளிகள் அல்லது 0.23% என குறைந்து 59,605 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 43.05 புள்ளிகள் அல்லது 0.25% குறைந்து 17,511 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :

ஆக்சிஸ் வங்கி லிமிடெட், ஐடிசி லிமிடெட், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், 7 சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், மாருதி சுசுகி இந்தியா ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

ஏசியன் பெயிண்ட்ஸ், லார்சன் & டூப்ரோ, இண்டஸ்இண்ட் வங்கி, பார்தி ஏர்டெல், டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஃபின்சர்வ், இன்ஃபோசிஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : 

ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், கோல் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, ஐடிசி லிமிடெட், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன், டாடா ஸ்டீல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

ஏசியன் பெயிண்ட்ஸ், லார்சன் & டூப்ரோ, டிவிஸ் லேபரட்டரீஸ், அதானி எண்டர்பிரைசஸ், இண்டஸ்இண்ட் வங்கி, ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

Leave a Comment