அமெரிக்காவில் பட்டினி கிடக்கும் இந்தியப் பெண்..! அடையாளம் காண முடியவில்லை..வருத்தத்தில் தாய்..!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த ஆகஸ்ட் 2021ம் ஆண்டு சையதா லுலு மின்ஹாஜ் என்ற பெண் முதுகலை பட்டப்படிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இதன்பிறகு, டெட்ராய்டில் உள்ள டிரைன் பல்கலைக்கழகத்தில் தகவல் அறிவியலில் முதுகலை பட்டப்படிப்பைத் தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் மின்ஹாஜின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. அந்த வீடியோவில் மின்ஹாஜ் சிகாகோவில் உள்ள சாலையில் பட்டினியால் உடல் இளைத்து காணப்பட்டார். அந்த வீடியோவைக் கண்ட பெண்ணின் தாயார் சையதா வஹாஜ் பாத்திமா வருத்தத்திற்கு ஆளானார்.

இதன்பின், பாத்திமா வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி, அவள் எங்களுடன் இரண்டு மாதங்களாக தொடர்பில் இல்லை, தயவு செய்து மின்ஹாஜை இந்தியாவிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், இந்த வீடியோவில் எனது சொந்த மகளை என்னால் அடையாளம் காண முடியவில்லை. அவள் உடல் மற்றும் மனதளவில் நிறைய மாறிவிட்டாள் என்று கூறியுள்ளார். பின் இரண்டு மாதங்களுக்கு முன்பு அவள் ஓஹியோவில் உள்ள மற்றொரு பல்கலைக்கழகத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது யாரோ அவளது மொபைல் ஃபோனைத் திருடினார்கள்.

அவள் அந்த நபரின் பின்னால் ஓடியபோது, ​​​​பின்னர் வேறு யாரோ எடுத்துச் சென்ற பையை சாலையில் மறந்துவிட்டாள் என்று அந்த பெண்ணின் தாயார் பாத்திமா கூறினார். மேலும், பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தலைவர் கலீகுர் ரஹ்மானும் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் இந்தப் பிரச்னையை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.