உலகம்

வீட்டை தாக்கிய விண்வெளி குப்பை! நாஸாவிடம் 80,000 டாலர் கேட்டு கோரிக்கை!

அமெரிக்கா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், உள்ள ஒரு வீட்டில் விண்வெளியில் இருந்து சிறிய விண்வெளி குப்பை ஒன்று வீட்டின் மீது விழுந்துள்ளது. அதில் அந்த வீட்டின் கூரை உடைந்து நொறுங்கியிருக்கிறது.

இதன் காரணமாக அந்த வீட்டில் வசித்து வந்த குடும்பமானது நாசாவிடம் 80,000 அமெரிக்க டாலர் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சம்பவம் குறித்தது சட்ட நிறுவனமான க்ரான்ஃபில் சம்னர் (Cranfield Sumner) செய்தி நிறுவனமான AFPக்கு அறிக்கை ஒன்றை தெரிவித்தார்.

அந்த அறிக்கையில்,”கடந்த மார்ச் 8 ஆம் தேதி அன்று 700 கிராம் எடையுள்ள ஒரு பொருளானது புளோரிடாவின் நேபிள்ஸில் உள்ள ஒரு வீட்டைத் தாக்கி இருக்கிறது. மேலும், இதனால் அந்த வீட்டின் மேற்கூரையில் ஒரு பெரிய துளையும் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) கழிவுப்பொருளாக வெளியிடப்பட்ட பயன்படுத்தப்பட்ட பேட்டரிகளின் சரக்குக் கட்டையின் ஒரு பகுதி அதான் என்று நாசா பின்னர் உறுதி செய்துள்ளது.

பூமியில் விழுவதற்கு முன் முழுமையாக எரிவதற்கு பதிலாக, அதில் ஒரு பகுதி அப்படியே எரியாமல் வீட்டின் மீது விழுவந்துள்ளது என நாசா மேலும் தெரிவித்திருக்கிறது.” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்தபோது வீட்டின் உரிமையாளரான ஓடெரோவின் மகன் வீட்டில் இருந்ததாகவும். யாருக்கும் எந்த உடல் காயங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அந்த ஓடெரோவின் குடும்பம் அமெரிக்கா விண்வெளி துறையான நாசாவிடம் 80,000 டாலர் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இதற்கு நாசாவும் விரைவில் பதிலளிப்பார்களா என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Recent Posts

பட்டதாரிகளே NIEPMDயில்108 காலியிடங்கள் …! முழு விவரம் இதோ ..!

NIEPMD ஆட்சேர்ப்பு : பன்முக ஊனமுற்ற நபர்களின் அதிகாரமளிப்பதற்கான தேசிய நிறுவனம் (NIEPMD) தற்போது வேலைவாய்ப்பு அறிவித்துள்ளனர். அதன்படி உதவி பேராசிரியர், விரிவுரையாளர், சிறப்புக் கல்வியாளர், மருத்துவ உதவியாளர்…

6 mins ago

திமுகவின் கோரிக்கைகளை பிரதிபலித்தாரா தவெக தலைவர் விஜய்.? நீட் விலக்கு., மாநில உரிமை…

சென்னை: நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, மாநில உரிமைகள், கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று பல்வேறு கருத்துகளை தவெக தலைவர் விஜய் இன்றைய விழாவில் குறிப்பிட்டார்.…

13 mins ago

120 உயிர்கள் போன ஹத்ராஸ் சம்பவம்.. ‘போலா பாபா’ தலைமறைவு!

உத்தரப் பிரதேசம்: ஹத்ராஸ் மாவட்டத்தில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி, 161 பேர் உயிரிழக்க முக்கிய காரணம் என போலே பாபாவை பலரும் குறிப்பிடுகின்றனர்.…

18 mins ago

திருமணம் செய்ய மறுத்த காதலன்…பிறப்புறுப்பை வெட்டிய பெண் மருத்துவர்!

பீகார் : மாநிலம் சரண் மாவட்டத்தில் காதலனின் அந்தரங்க உறுப்பை அறுத்த பெண் ஒருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். அந்த பெண் (பாதிக்கப்பட்ட) விகாஸ் சிங் என்பவரை…

28 mins ago

அசாமை புரட்டிப்போட்ட மழை, வெள்ளம்.. 38 பேர் பலி.!

அசாம் வெள்ளம்: அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 38 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வெள்ளத்தில் மூழ்கி மூன்று பேர்…

40 mins ago

ஓய்வு பெறவில்லை இனிமே தான் ஆட்டமே இருக்கு! மௌனம் களைத்த டேவிட் மில்லர்!

உலகக்கோப்பை 2024 டி20 : இறுதிப்போட்டியில் இந்திய அணியும், தென்னாபிரிக்கா  அணியும் மோதியநிலையில் , இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. போட்டி முடிந்த…

1 hour ago