இஸ்ரேலுக்கு எதிராக இனப்படுகொலை வழக்கு தொடர்ந்த தென்னாப்பிரிக்கா!

அக்டோபர் மாதம் 6ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது போர் தொடுத்தனர் . ஹமாஸ் அமைப்பினர் நடத்திய முதற்கட்ட தாக்குதலில் இஸ்ரேலில் சுமார் 1,400 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் பிணை கைதிகளாக பலர் கடத்தி செல்லப்பட்டனர்.

அதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் பதில் தாக்குதலில் இதுவரை 21 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் காஸாவில் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்துவருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், காசாவில் இனப்படுகொலை செயல்கள் நடைபெருவதாக இஸ்ரேலுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) நேற்று (வெள்ளிக்கிழமை) வழக்கு ஒன்றை  தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

தென்னாப்பிரிக்காவின் குற்றச்சாட்டு இஸ்ரேல் ஒப்பந்தத்தின் கீழ் அதன் கடமைகளை மீறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது ஒரு மக்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்க முயற்சிக்கும் குற்றமாகும்.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் : காஸா நகரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது.!

இதற்கிடையில், இஸ்ரேல், குறிப்பாக அக்டோபர் 7, 2023 முதல், இனப்படுகொலையைத் தடுக்கத் தவறிவிட்டது. அது மட்டும் இல்லாமல், இனப்படுகொலைக்கான தூண்டுதலுக்கு எதிராக வழக்குத் தொடரத் தவறிவிட்டது” என்று DIRCO ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.