வைரல் மருத்துவர் ஷர்மிகா நேரில் ஆஜர்.! சித்த மருத்துவ இயக்குனரகம் விதித்த புதிய உத்தரவு.!

தனது நேர்காணல் மூலம் பல சர்ச்சை கருத்துக்கள் சிக்கலில் மாட்டிக்கொண்ட சித்த மருத்துவர் ஷர்மிகா இன்று சித்த மருத்துவ கல்லூரி இயக்குநரகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். 

அண்மைகாலமாக இணையத்தில் மிகவும் வைரலாக இருக்கும் சித்த மருத்துவர் என்றால் அது மருத்துவர் ஷர்மிகா தான். அதுவும் அவர் கூறிய குளோப்ஜாமூன் சாப்பிட்டால் கிலோ கணக்கில் உடல் பருமன் ஆகும் என்றது, நுங்கு சாப்பிட்டால் பெண்களுக்கு நல்லது என கூறியது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் இணையத்தில் பேசு பொருளாக மாறியது . இதன் மூலம் பலரது கேலி கிண்டலுக்கு கூட உள்ளாகினர் சித்த மருத்துவர் ஷர்மிகா.

அதன் பிறகு, தான் அப்படி தவறுதலாக ஒரு பேச்சுக்கு கூறியது தான். எனக்கு ஆயிரம் வேலை இருக்கு என கூறினால், ஆயிரம் வேலை இருக்கு என்பது அர்த்தமல்ல அது போல இது எனது பேச்சுவாக்கில் நான் கருத்துக்கள் இனி ஆராய்ந்து தெளிவாக பேசுகிறேன் என கூறினார்.

இந்நிலையில், மருத்துவர் ஷர்மிகா கூறிய கருத்துக்கள் மருத்துவர்களிடையேயும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, அவர் கூறிய கருத்துக்கள் குறித்து நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என சித்த மருத்துவ கல்லூரி இயக்குனரகம் கூறியிருந்தது.

அதனை தொடர்ந்து,  சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி இயக்குநரகத்தில் சித்த மருத்துவர் ஷர்மிகா நேரில் ஆஜரானார். தன்னை பற்றி வந்த புகார்களுக்கு வாய்மொழியாக விளக்கம் |அளித்ததார்.

இதனை தொடர்ந்து, வரும் பிப்ரவரி 10ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு சித்த மருத்துவ கல்லூரி இயக்குநரகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

Leave a Comment