சூடானில் துப்பாக்கிசூடு, கலவரம் – இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!

சூடானில் துப்பாக்கிசூடு, கலவரங்கள் நடந்து வருவதால் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.

சூடான் ராணுவத்துக்கும், துணை ராணுவ ஆதரவு படையினருக்கும் இடையே மோதல் வெடித்ததால் கடும் துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரங்கள் நடந்து வருகிறது. சக்தி வாய்ந்த துணை ராணுவக் குழுவான RSF-ன் நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பு இல்லாமல் நடந்ததாகவும், இது சட்டவிரோதமானவை என்று ராணுவம் கூறிய நிலையில், சூடானில் ராணுவ மோதல் நிலவி வருகிறது.

சூடானின் துணை ராணுவ ஆதரவு படைகள், ஜனாதிபதி மாளிகை, ராணுவத் தலைவர் ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹானின் இல்லம் மற்றும் கார்ட்டூமின் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இதுபோன்று பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சூடானில் துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரங்கள் நடப்பதால், இந்தியர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும், வெளியே நடமாடுவதை தவிர்க்குமாறும் சூடானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Comment