அதிர்ச்சி…27 வயதான பிரபல யூடியூபர் கீனன் காஹில் காலமானார்..!

பிரபல யூடியூபர் கீனன் காஹில் திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு (Open Heart Surgery) பின் காலமானார்.

அமெரிக்காவின் இல்லினாய்ஸில் பிறந்த காஹில், பிரபலங்களின் விடீயோக்களுக்கு உதடு அசைவு செய்வதில் (லிப் சிங்க்) சிறந்தவர். சிகாகோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 27 வயதான காஹில் காலமானார். காஹில்லின் சிறுவயதில் அவருக்கு  மரபணுக்கோளாறு உள்ளது எனக் கண்டறியப்பட்டது.

Maroteaux-Lamy சிண்ட்ரோம் என்ற மரபணுக்கோளாறால் சிகாகோ மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். Maroteaux-Lamy சிண்ட்ரோம் என்ற மரபணுக்கோளாறானது உடலில் உள்ள பல திசுக்கள் மற்றும் உறுப்புக்களை பெரிதாக்குகிறது. மேலும் எலும்பு முறிவு போன்றவற்றையும் ஏற்படுத்துகிறது. இந்த கோளாறால் டிசம்பர் 15 ஆம் தேதி திறந்த இதய அறுவை சிகிச்சை (open heart surgery) மேற்கொள்ளப் போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அறுவை சிகிச்சை முடிந்தபின்பும் அவருக்கு சில சிக்கல்கள் இருந்தது. இந்த சிக்கல்களால் 29 வியாழன் அன்று சிகாகோ மருத்துவமனையில் லைஃப் சப்போர்ட் எடுக்கப்பட்ட பின்பு காலமானார், என்று அவரது மேனேஜர் டேவிட் கிரஹாம் கூறினார். காஹிலின் மறைவு செய்தியைத் தொடர்ந்து, பல ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கள் இரங்கலைப் பகிர்ந்து கொண்டனர்.

Leave a Comment