டெல்லி மாநகராட்சி மேயராக ஷெல்லி ஓபராய் தேர்வு!

டெல்லி மேயராக ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி மாநகராட்சி மேயராக ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். டெல்லி மேயர் தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஷிகா ராய் விலகியதால் ஷெல்லி ஓபராய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், டெல்லி மாநகராட்சி துணை மேயர் பதவிக்கான போட்டியில் இருந்தும் பாஜக வேட்பாளர் சோனி பாண்டேவும் வாபஸ் பெற்றுள்ளார். முன்னதாக பிப்ரவரியில் டெல்லி மாநகராட்சி மேயராக ஓபராய் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் மேயராக ஷெல்லி ஓபராய் ஒருமனதாக தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்டார்.