தமிழ் பேசவே சிரமப்பட்ட ஷாருக்கான்! ‘ஹேராம்’ படத்தில் 43 டேக் வாங்கிய சம்பவம்!

கமல்ஹாசன் இயக்கி நடித்த திரைப்படங்கள் பல இருக்கிறது. அதில் பெரிய அளவில் பேசப்பட்ட திரைப்படங்களில் ஒன்று கடந்த 2000ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஹேராம்’.  இந்த திரைப்படத்தில் ஷாருக்கான், ராணி முகர்ஜி, வசுந்தரா தாஸ், நசிருதீன் ஷா, ஹேமா மாலினி, சவுரப் சுக்லா, அதுல் குல்கர்னி, கிரிஷ் கர்னாட் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் அந்த சமயம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. வசூல் ரீதியாகவும் அந்த சமயம் இந்த திரைப்படம் தோல்வி அடைந்தது. பிறகு ஆண்டுகள் கடக்க கடக்க இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு படத்தை அந்த சமயம் கொண்டாட தவறவிட்டுவிட்டோமா என வருத்தப்பட்டனர்.

அந்த அளவிற்கு ஒரு தரமான படத்தை தமிழ் சினிமாவிற்கு கமல்ஹாசன் கொடுத்திருப்பார். இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்த கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டது என்றே கூறலாம். இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது ஷாருக்கான் மிகவும் ஷாருக்கான் சீரமைப்பட்டாராம்.  அவர் பேசும் ஒரே ஒரு வசனத்துக்காக இந்த திரைப்படத்தில் 43 டேக் எடுக்கப்பட்டதாம்.

முன்னதாகவே கமல்ஹாசன் நீங்கள் டப்பிங் பேசவேண்டாம் நீங்கள் நடித்தால் மட்டும் போதும் என ஷாருகானிடம் கூறினாராம். ஏனென்றால், படம் டப்பிங் செய்யப்படாமல் நேரடியாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட படம் என்பதால் நான் கண்டிப்பாக தமிழ் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயத்தில் ஷாருக்கான் இருந்தாராம்.

அப்போது ஒரு காட்சியில் கமல்ஹாசனை பார்த்து அப்பா துப்பாக்கி என ஷாருக்கான் பேசுவார். அந்த காட்சி எடுக்கும்போது கிட்டத்தட்ட ஷாருக்கான் சரியாக அந்த வசனத்தை பேசவில்லை என்ற காரணத்தால் 43 முறை டேக் வாங்கி அந்த காட்சி எடுக்கப்பட்டதாம். இந்த தகவலை ஷாருக்கானே தெரிவித்திருந்தார்.  இது தான் தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம் எனவும் ஷாருக்கான் வருத்தத்துடன் பேசினார்.

ஒரு வழியாக படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நன்றாகவும் அந்த வசனத்தையும் ஷாருக்கான் பேசிவிட்டார். படத்தின் மூலம் அவருக்கு பாலிவுட்டில் மற்றுமின்றி தமிழ் சினிமாவிலும் நல்ல பெயர் கிடைத்தது என்றே சொல்லலாம். மேலும் ‘ஹேராம்’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு யூடியூபில் வெளியிடபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.