Market LIVE:சென்செக்ஸ் 600 புள்ளிகள் அதிகரித்து, நிஃப்டி 17,700க்கு மேல் உயர்ந்தது

இந்தியப் பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்து 59,761 புள்ளிகளுடன் வர்த்தகம் திறக்கப்பட்டது.

சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்து 59,761 புள்ளிகளுடனும், நிஃப்டி 164.20 புள்ளிகள் அதிகரித்து 17,786.50 புள்ளிகளுடனும் ஏற்றம் பெற்று உயர்வுடன் காணப்படுகிறது. இந்த ஏற்றத்தின் மூலம் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், இண்டஸ்இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் டெக் மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க நிஃப்டி லாபம் பெற்றன.

NSE நிஃப்டி 50 குறியீடு 1.13 சதவீதம் அதிகரித்து, 178.95 புள்ளிகள் உயர்ந்து 15,989.8 ஆகவும், S&P BSE சென்செக்ஸ் 1.16 சதவீதம் அதிகரித்து, 616.62 புள்ளிகள் உயர்ந்து 53,750.95 ஆகவும் ஏற்றத்துடன் காணப்பட்டது. இது கடந்த ஜூன் 2021 முதல் காணப்பட்ட உயர்வுகளில் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

மேலும் கச்சா எண்ணெய் விலை 9 சதவீதம் சரிந்தது. எண்ணெய் விலை சரிவைத் தொடர்ந்து ஆயில் & நேச்சுரல் கேஸ் கார்ப் மற்றும் ஆயில் இந்தியா பங்குகள் முறையே 5.1 சதவீதம் மற்றும் 8.6 சதவீதம் சரிந்தன.

Leave a Comment