உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை மழை! இருளில் சூழ்ந்த உக்ரைன்.!

உக்ரைன்-ரஷ்யா போர் ஆரம்பித்து 9 மாதங்களில், ரஷ்யா ஒரேநாளில் 100 ஏவுகணைகளை உக்ரைன் மீது ஏவியுள்ளது.

ரஷ்யப்படைகளால் 100 ஏவுகணைகள் உக்ரைன் மீது ஏவப்பட்டதாகவும், அவை பெரும்பாலும் உக்ரைனின் ஆற்றல் கட்டமைப்பின் மீது குறி வைத்து  ஏவப்பட்டதாகவும் உக்ரைன் தரப்பில் கூறப்பட்டது, மேலும் போர் தொடங்கி 9 மாதங்களில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என்று கூறப்பட்டது.

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறும்போது, இதன்மூலம் ரஷ்யாவிற்கு என்ன வேண்டும் என்பது தெரிகிறது, 85 ஏவுகணைகள் இதுவரை இங்கே விழுந்துள்ளது, இன்னும் வந்து கொண்டிருக்கிறது, உக்ரைன் தலைநகர் கீவில் 5 மாடிக்கட்டிடம் தாக்குதலில் தீப்பற்றிக்கொண்டது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவித்தார், மேலும் நகரின் நிறைய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

மற்றும் நாட்டின் பல இடங்களிலும் இந்த ஏவுகணை தாக்குதலின் மூலம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நாடே இருளில் மூழ்கியிருக்கிறது. தன்னார்வலர்கள் மக்களுக்கு தேவையான உதவி செய்து வருகின்றனர். மீட்புக்குழுவினர் தாக்குதல் நடந்த இடங்களில் காயம்பட்டவர்களை மீட்டு வந்தனர்.

 

Leave a Comment