வேளாண்மை, தோட்டக்கலை பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

வேளாண்மை, தோட்டக்கலை பட்டதாரி இளைஞர்களை தொழில் முனைவோராக்கிட ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிப்பு. 

நேற்று 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இன்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்  அவர்கள், தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தோளில் பச்சை துண்டு அணிந்து வந்து வேளாண் பட்ஜெட்டை வாசித்து வருகிறார்.

வேளாண்மை, தோட்டக்கலை பட்டதாரி இளைஞர்களுக்கு நிதியுதவி 

அந்த வகையில், ‘வேளாண்மை, தோட்டக்கலை பட்டதாரி இளைஞர்களை தொழில் முனைவோராக்கிட ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும், ரூ.50 கோடி செலவில் நீலமலையில் அங்கக வேளாண்மை ஊக்குவிப்பு மையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Leave a Comment