விராட் கோலிக்கு பதில் ரஜத் படிதார் ஏன்? ரோஹித் சர்மா விளக்கம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (ஜனவரி 25) -ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடக்கிறது.  இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார்.

இதனையடுத்து, விராட் கோலி விலகி இருக்கும் நிலையில், அந்த இடத்தில் எந்த வீரர் களமிறங்குவார் என்ற கேள்வி எழும்பியது. பிறகு, விராட் கோலிக்கு பதில் ரஜத் படிதார் இடம்பெற்றுள்ளார் என தகவல் வெளியாகி இருந்தது.

இந்தியா vs இங்கிலாந்து : பிட்ச் முதல் ஸ்ட்ரீமிங் வரை முழு விவரம் இதோ!

இந்நிலையில், விராட் கோலிக்கு பதிலாக அணியில் ரஜத் படிதார்  சேர்க்கப்பட்ட காரணத்தை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி இல்லாததை நிரப்ப ஒரு அனுபவமிக்க வீரர் இருந்தால் நன்றாக் இருக்கும். அந்த மாதிரி ஒரு வீரரை தேர்வு செய்யலாம் என்று நினைத்தோம்.

ஆனால் இளைஞர்கள் இது போன்ற போட்டிகளில் விளையாடினாள் நன்றாக இருக்கும் என்பதால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்று திட்டமிட்டோம்.  எனவே, விராட் கோலிக்கு பதிலாக ரஜத் படிதார் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்” என கூறியுள்ளார்.  மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” கண்டிப்பாக இந்த டெஸ்ட் தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என்று நம்புகிறோம் எனவும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

Recent Posts

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

12 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

15 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

16 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

44 mins ago

இந்த 11 மாவட்டத்துக்கு கனமழை…3 மாவட்டத்துக்கு மிக கனமழை..வானிலை மையம் அலர்ட்!

சென்னை : இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,…

1 hour ago

வைகாசி விசாகம் 2024 இல் எப்போது?

வைகாசி விசாகம் 2024 -இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகம் எப்போது என்றும்  தேதி, நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இப்ப பதிவில் காணலாம். வைகாசி விசாகம்…

1 hour ago