கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் தரக்கூடாது..! காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

சிவகங்கையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் எம்.பி கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக கட்சியின் ஒரு தரப்பினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவர்கள் சுதர்சன நாச்சியப்பன், K.R ராமசாமி உள்ளிட்டோர் முன்னர் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின் எம்.பியாக காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம் பதவி வகிக்கும் நிலையில் அவர் அவ்வபோது மோடியை புகழ்வதாகவும், காங்கிரசின் முடிவுகளுக்கு எதிராக பேசுவதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையில் சிவகங்கையில் இன்று காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், மூத்த தலைவர்கள் சுதர்சன நாச்சியப்பன், K.R ராமசாமி, சுந்தரம் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதன் போது, கட்சி தலைமை வரும் நாடாளுமன்ற தேர்தலில் கார்த்தி சிதம்பரம் போட்டியிட வாய்ப்பு தரக்கூடாது எனவும் ராகுல் காந்திக்கு எதிராக பேசிய கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூடுதல் தொகுதிகளை கேட்டுள்ளோம்- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி..!

மேலும் கார்த்தி சிதம்பரத்தை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்க கோரியும் சிவகங்கையில் நடந்த கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே, சிவகங்கை தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகளிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த நிர்வாகிகளும் சிவகங்கை தொகுதியை காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கூட்டணி கட்சிக்கும் வழங்கக்கூடாது எனவும் திமுகவே நேரடியாக வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment