தொடர் விடுமுறை: இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பண்டிகைகள் காலங்களில் தொடர் விடுமுறையை முன்னிட்டு பொது மக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம். அதன்படி, குடியரசு தினம், தைப்பூசம், சனி மற்றும் ஞாயிறு என மொத்தம் 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அந்த வகையில், சென்னையிலிருந்து, தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 24, 25ஆம் தேதிகளில் தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 405 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

அதுபோல், பெங்களூர் மதுரை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பிற இடங்களுக்கு செல்ல ஏதுவாக 175 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 580 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும். கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க இன்றே கடைசி நாள் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, கோயம்பேட்டில் இன்றுடன் ஆம்னி பேருந்துகள் முழுமையாக தடை செய்யப்படும் என்று கூறியதோடு, ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்காக அரசு செயல்பட முடியாது அமைச்சர் சேகர்பாபு இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டியளித்துள்ளார்.