16ஜிபி ரேம்..64 எம்பி கேமரா..5500 mAh பேட்டரி.! அறிமுகமானது ரெட்மி கே70இ.!

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ரெட்மி, நேற்று (நவம்பர் 29ம் தேதி) ஒரு பிளாக்பஸ்டர் வெளியீட்டு நிகழ்வை நடத்தியது. இந்த நிகழ்வில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரெட்மி கே70 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்ககளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் ரெட்மி கே70 (Redmi K70), ரெட்மி கே70இ (Redmi K70E) மற்றும் ரெட்மி கே70 ப்ரோ (Redmi K70 Pro) என 3 மாடல்கள் அறிமுகமாகியுள்ளன. இதில் ரெட்மி கே70இ போனில் இருக்கக்கூடிய அம்சங்களை இப்போது காணலாம்.

ரெட்மி கே70இ விவரக்குறிப்புகள்

டிஸ்பிளே

ரெட்மி கே70இ போனில் 2712 × 1220 (1.5K) பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 6.74 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்பிளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டைக் கொண்டுள்ளது. இதனால் கேம் விளையாடுவதற்கும், வீடியோ பார்ப்பதற்கும் ஸ்மூத்தாக இருக்கும்.

ஆண்ட்ராய்டை அடுத்து ஐஓஎஸ்.! புதிய அம்சத்தை வெளியிட்ட வாட்ஸ்அப்.!

அதோடு 1800 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. இதனால் வெயிலில் கூட தெளிவாக பார்க்க முடியும். பாதுகாப்பிற்காக இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் பேஸ் அன்லாக் வசதி உள்ளது.

பிராசஸர்

மாலி ஜி615-எம்சி6 கிராஃபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்ட புதிய மீடியாடெக் டைமன்சிட்டி 8300 அல்ட்ரா சிப்செட் ரெட்மி கே70இ போனில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான நிறுவனத்தின் புதிய ஹைப்பர் ஓஎஸ் உள்ளது.

அல்ட்ராசோனிக் டிஸ்டென்ஸ் சென்சார், ரியர் ஃப்ளிக்கர் சென்சார், கைரோஸ்கோப், எலக்ட்ரானிக் காம்பஸ், இன்ஃபிராரெட் சென்சார் போன்ற சென்சார்கள் உள்ளன. வைஃபை 6, புளூடூத் 5.4, 5ஜி, 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ் மற்றும் என்எப்சி போன்ற அம்சங்களும் உள்ளன.

கேமரா

ரெட்மி கே70இ ஸ்மார்ட்போனில் எல்இடி பிளாஷுடன் கூடிய டிரிப்பில் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் ஓஜஎஸ் அம்சம் கொண்ட 64 எம்பி மெயின் கேமரா, 8 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால் செய்ய முன்புறத்தில் பச்-ஹோல் கட்அவுட் உடன் 16 எம்பி ஸ்னாப்பர் உள்ளது.

இந்த கேமரா மூலம் 720 பிக்சல் முதல் 1080 பிக்சல் தெளிவுடன் கூடிய வீடியோவை 60 எஃப்பிஎஸ்-ல் பதிவு செய்யலாம். இதில் வீடியோ சூப்பர் ஆன்ட்டி சேக், பிரைவேசி ப்ரொடக்சன் வாட்டர் மார்க். டைம் லேப்ஸ் மேக்ரோ, டைம் லேப்ஸ் போட்டோகிராபி, பீக் போகஸ், ஏஐ வாட்டர்மார்க், மைக்ரோ மூவி, லாங் எக்ஸ்போசர், டைனமிக் போட்டோஸ், ஐடி கார்டு போட்டோ மோட் போன்ற கேமரா அம்சங்கள் உள்ளன.

ஒரே தேதியில் 4ஜி மற்றும் 5ஜி.! ரெட்மியின் புது மாடல் என்ன தெரியுமா.?

பேட்டரி

198 கிராம் எடை கொண்ட இந்த ரெட்மி கே70இ போனில் 5500 mAh திறன் கொண்ட லித்தியம்-அயன் பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் கூடிய 90 வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. டால்பி அட்மோஸ் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன.

ஸ்டோரேஜ் மற்றும் விலை

பிளாக், கிரீன் மற்றும் வைட் என மூன்று வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் என மூன்று வேரியண்ட்கள் உள்ளன.

இதில் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 1999 யுவான் (ரூ.23,529) என்ற விலையிலும், 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 2199 யுவான் (ரூ.25,883) என்ற விலையிலும், 1 டிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 2599 யுவான் (ரூ.30,591) என்ற விலையிலும் கிடைக்கிறது.