டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜா படைத்த புதிய சாதனை.!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 2,500 ரன்கள் மற்றும் 250 விக்கெட்களை அதிவிரைவாக (62 போட்டிகள்) எடுத்து ஜடேஜா சாதனை படைத்துள்ளார்.

டெஸ்டில் நம்பர்-1 ஆல்ரவுண்டராக இருக்கும் ரவீந்திர ஜடேஜா, டெஸ்ட் கிரிக்கெட்களில் அதிவிரைவாக 2,500 ரன்கள் மற்றும் 250 விக்கெட்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்து வரும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதன்மூலம் 62 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி ஜடேஜா 2,500 ரன்கள் மற்றும் 250 விக்கெட்களை எடுத்து முதல் இந்தியராகவும், சர்வதேச அளவில் இரண்டாவதாகவும் இந்த சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் இந்தியாவின் கபில்தேவ் 65 போட்டிகளிலும், ஒட்டுமொத்தமாக சர்வதேச அளவில் இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் இயன் போதம் 55 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட் செய்து 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர், இதில் ஜடேஜா மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்களும், ஷமி 4 விக்கெகளும் எடுத்தனர். இந்தியா முதல்நாள் ஆட்டநேர முடிவில் 21/0 ரன்களுடன் விளையாடி வருகிறது, இன்று இரண்டாம் நாள் ஆட்டம் காலை 9:30 மணிக்கு தொடங்குகிறது.

Leave a Comment