குண்டுவெடிப்பு சம்பவம்… பலத்த பாதுகாப்புடன் இன்று மீண்டும் திறந்த ராமேஸ்வரம் கஃபே!

Rameshwaram Cafe : குண்டுவெடிப்பு சம்பவம் நடந்து 8 நாட்களுக்குப் பிறகு பெங்களுருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே பலத்த பாதுகாப்புடன் மீண்டும் இன்று திறக்கப்பட்டது. கடந்த 1ம் தேதி பெங்களூருவில் உள்ள பிரபலமான ராமேஷ்வரம் கஃபே ஹோட்டலில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த வெடிகுண்டு சம்பவத்தில் 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சிசிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அதனை வைத்து உள்ளூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்த நிலையில், பின்னர் பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

Read More – ராமேஸ்வரம் கஃபே வெடிகுண்டு விபத்து… தலைமையிடம் இதுவா.? முக்கிய நபரிடம் NIA தீவிர விசாரணை.!

இதையடுத்து, ராமேஸ்வரம் கஃபே வெடிகுண்டு வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சிசிடிவி கட்சியின் வெள்ளை தொப்பி அணிந்த ஒரு மர்ம நபர் ஹோட்டலில் வேண்டிகொண்டு வைத்தது தெரியவந்தது.  அதன்படி, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டு வைத்த நபரை காவல்துறையினர், என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Read More – வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு… மத்திய அரசு ஒப்புதல்!

இதுதொடர்பாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த குற்ற சம்பவம் பல்லாரியை தலைமையிடமாக கொண்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு விசாரணையை நடைபெறுகிறது. சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, வெடிகுண்டு வைத்தவர் பற்றி துப்புக் கொடுத்தால் 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தெரிவித்தது.

Read More – எங்கள் தலைவர் ராகுல் காந்தியின் 5 உத்திரவாதங்கள் இதுதான்.! ப.சிதம்பரம் விளக்கம்.!

இந்த சூழலில் வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக விசாரணை பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், குண்டுவெடிப்பு நடந்து 8 நாட்களுக்குப் பிறகு ராமேஸ்வரம் கஃபே ஹோட்டல் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. பெங்களூரு ஒயிட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் ஏற்பட்ட சேதங்கள் சரி செய்யப்பட்ட நிலையில், இன்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பலத்த பாதுகாப்புடன் திறக்கப்பட்டுள்ளது. உணவகத்திற்கு வருவோரை மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

Leave a Comment