ராஜீவகாந்தி மருத்துவமனை தீ விபத்து – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை ராஜீவகாந்தி மருத்துவமனையில், 105 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு தீயை அணைத்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், 105 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டதும் நோயாளிகள் அனைவரும் உடனடியாக வேறு கட்டடத்திற்கு மாற்றப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. வரும்நிதியாண்டில் நரம்பியல், நெஞ்சகத்துறைக்கு புதிய கட்டடம் காட்டப்படும் என விளக்கமளித்துள்ளார்.