அனைத்து ரேஷன் கடைகளிலும் விரைவில் “கியூ ஆர் கோடு” – அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் விரைவில் QR CODE வசதி செயல்படுத்தப்படும் என அறிவிப்பு.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளின் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில், பொது மக்களின் வசதிக்காக ரேஷன் கடையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் விரைவில் மின்னணு பரிமாற்றம் (கியூ ஆர் கோடு) மூலமாக பணமற்ற பரிவர்த்தனை செய்யும் வசதி கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில், தமிழக ரேஷன் கடைகளிலேயே கியூ ஆர் கோடு மூலமாக பண பரிவர்த்தனை செய்யும் திட்டம் தற்போது முதன் முறையாக காஞ்சிபுரத்தில் துவங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் விரைவில் கியூ ஆர் கோடு நடைமுறை கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று கோவையில், ரேஷன் கடைகளில் மின்னனு பரிவர்த்தனையை நடைமுறையை துவக்கி வைத்த பின் பேசிய உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இந்த மாதத்திற்குள் அனைத்து நியாயவிலை கடைகளிலும் ‘QR CODE’ வசதி நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தார்.