புஷ்பா அப்டேட்: ராஷ்மிகா மந்தனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு.!

புஷ்பா படத்தில் நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திர லுக் போஸ்டர் வெளியீடு.

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகும் திரைப்படம் புஷ்பா. இந்த படத்தை பிரபல இயக்குனரான சுகுமார் இயக்குகிறார். படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தானா நடித்துள்ளார்.

pushpa 2

ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளார்.

pushpa 4

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ராக்ஸ்டார் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

pushpa 1

இந்த முதல் பாகம் வரும் டிசம்பர் 25 – ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். மேலும், படத்திலிருந்து வெளியான முதல் பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

SoulmateOfPushpa 2

இந்த நிலையில், தற்போது படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திரத்திற்கான முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படத்தில் அவர் ஸ்ரீவல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் இதுவரை இல்லாத விதமாக கிராமத்து பெண்ணாக இருக்கிறார்.