Puducherry: பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 வைப்புத்தொகை! முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்!

கடந்த மார்ச் 13ம் தேதி நடைபெற்ற புதுச்சேரியில் சட்டப்பேரவையில் 2023-24-ஆம் ஆண்டிற்கான ரூ.11,600 கோடிக்கான முழு பட்ஜெட்டை அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி சட்டப்பேரவையில் மாதத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.

இதில் குறிப்பாக, புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு தேசிய வங்கியில் ரூ.50 ஆயிரம் வைப்பு தொகையாக செலுத்தப்படும். அதாவது, புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தோருக்கு பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு, முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் குழந்தை பிறந்தவுடன் ரூ.50 ஆயிரம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 18 வருட காலத்துக்கு நிரந்தர வைப்புத்தொகையாக செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பெண் குழந்தைகளை பெற்றெடுக்கும் பெற்றோர் மத்தியில் ரெங்கசாமி கொண்டு வரவுள்ள இந்த திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 வைப்பு தொகை திட்டத்தை முதலமைச்சர்  வைத்தார். பெண் குழந்தையின் பெயரில் 18 ஆண்டுகளுக்கு வங்கியில் ரூ.50,000 வைப்புத்தொகையாக இருக்கும் குறிப்பிடப்படுகிறது.