அனைவரின் ஆரோக்கியத்திற்காக பிரார்த்திக்கிறேன்..! பிரதமர் மோடியின் ரம்ஜான் வாழ்த்து..!

ஈகை திருநாளான இன்று பிரதமர் மோடி அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும், முஸ்லிம்கள் மிக முக்கியமான பண்டிகையான ரம்ஜான் பண்டிகையை மிகவும் கோலாகலமாக கொண்டாடுவதுண்டு. இஸ்லாமியர்கள் ஒன்பதாம் மாதத்தில், இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர். இந்த மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள், நோன்பை அனுசரிக்கின்றனர்.

வானில் தோன்றும் பிறை நிலவைக் கொண்டே இந்த நாள் முடிவு செய்யப்படும் என்பதால், உலகம் முழுவதும் பல்வேறு தேதிகளில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை, ஏப்ரல் 21 (வெள்ளிக்கிழமை) அல்லது ஏப்ரல் 22 (சனிக்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்தார். மேலும், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஈத்-உல்-பித்ர் நல்வாழ்த்துக்கள். நல்லிணக்கம் மற்றும் இரக்க உணர்வு நமது சமூகத்தில் மேலும் வளரட்டும். அனைவரின் அற்புதமான ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன். ஈத் முபாரக்!”என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Comment