ஹிரோஷிமாவில் பிரதமர் மோடி..! ஜப்பான் பிரதமருடன் சந்திப்பு..!

பிரதமர் மோடி இன்று ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாயாவைச் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.

பிரதமர் மோடி மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்வதற்காக நேற்று ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். ஜப்பான் ஹிரோஷிமாவில் ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற பிரதமர் மோடி இன்று ஹிரோஷிமாவில் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாயாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அந்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா-ஜப்பான் நட்புறவை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதம் மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து, பிரதமர் மோடி வியட்நாம் பிரதமர் பாம்மின் சின்-ஐ சந்தித்தும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

மேலும், ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஹிரோஷிமா சென்றுள்ள பிரதமர் மோடி அகிம்சையால் மட்டுமே உலகைக் காப்பாற்ற முடியும் என்று நம்பிய மகாத்மா காந்தியின் சிலையை திறந்து வைத்துள்ளார். இதன்பின், பிரதமர் மோடி மற்றும் பிற உலகத் தலைவர்கள் ஹிரோஷிமாவில் உள்ள அமைதி நினைவிடத்திற்குச் சென்று போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.