பெட்ரோல் அதிகபட்சமாக லிட்டர் ரூ.40-க்கு விற்பனை செய்ய வேண்டும் – சுப்பிரமணிய சுவாமி

எனது பார்வையில், அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.40-க்கு விற்கப்பட வேண்டும் என பாஜக மாநிலங்களவை எம்.பி சுப்பிரமணிய சுவாமி ட்வீட் செய்துள்ளார். 

இன்று நாளுக்கு நாள் நகைகளுக்கு விலை அதிகரிப்பது போல, பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் பெட்ரோல் விலையால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றன.

இந்நிலையில், சுப்பிரமணிய சுவாமி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், பெட்ரோல் விலை குறித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.90 என்பது, இந்திய மக்களிடம் ஒரு பெரிய சுரண்டல். சுத்திகரிக்கப்படுவதற்கு முன் பெட்ரோலின் விலை ரூ.30.  அனைத்து வரிகள் மற்றும் பெட்ரோல் பங்க் கமிஷன் என ரூ.60 சேர்கிறது. எனது பார்வையில், அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.40-க்கு விற்கப்பட வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.