நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டிற்கு வருகை தரவுள்ள 25 கம்பெனி மத்திய ஆயுதப் படையினர்

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தமிழக பாதுகாப்பு பணியில், 25 கம்பெனி மத்திய ஆயுத பாதுகாப்புப் படையினரை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. அதன்படி வரும் மார்ச் 1-ம் தேதி 15 கம்பெனி படையினரும், மார்ச் 7-ம் தேதி 10 கம்பெனி படையினரும் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளதாக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது. அதில், ”2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக 25 கம்பெனி மத்திய ஆயுத பாதுகாப்புப் படையினரை நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் போன்றவைகளுக்காக மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. அவற்றுள் 15 கம்பெனி மத்திய ஆயுத பாதுகாப்புப் படையினர் 2024 மார்ச் 1 அன்றும் 10 கம்பெனி மத்திய ஆயுத பாதுகாப்புப் படையினர் 2024 மார்ச் 7 அன்றும் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More – மெரினாவில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க ஸ்டாலின்

இந்நிலையில், தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றுள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Leave a Comment