PAKvsSL:தொடங்கியது டெஸ்ட் போட்டி…டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஸ்ரீலங்கா.!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட் போட்டிகொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஸ்ரீலங்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

விளையாடும் வீரர்கள் 

பாகிஸ்தான் வீரர்கள்: 

அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், ஷான் மசூத், பாபர் அசாம் (கேப்டன்), சவுத் ஷகீல், சர்ஃபராஸ் அகமது , ஆகா சல்மான், நௌமன் அலி, அப்ரார் அகமது, ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா

ஸ்ரீலங்கா வீரர்கள் 

திமுத் கருணாரத்ன (கேப்டன்), நிஷான் மதுஷ்கா, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, தினேஷ் சந்திமால், சதீர சமரவிக்ரம, ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய, விஷ்வா பெர்னாண்டோ, கசுன் ராஜித

முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகு அடுத்ததாக இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் ஜூலை மாதம் 24-ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.