இந்தியாவில் AI தொழில்நுட்ப பயன்பாடு குறித்து ஆலோசனை.! பிரதமர் மோடி உடன் சாம் ஆல்ட்மேன் சந்திப்பு.!

பிரதமர் மோடியுடன் OpenAI தலைமை அதிகாரி சாம் ஆல்ட்மேன் சந்தித்து பேசியுள்ளார். 

ChatGPT எனப்படும் செயற்கை நுண்ணறிவு வரவுக்கு பின்னர் தற்போது தொழில்நுட்ப உலகில் பல்வேறு மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதன் அசுர வளர்ச்சியின் பாதிப்பு குறித்து அறியாமலே அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் பாதிப்பை உணர்ந்த பல்வேறு நாடுகள் செயற்கை நுண்ணறிவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க திட்டமிட்டு உள்ளனர். இந்நிலையில்,பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேச ChatGPT நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளார்.

இந்நிலையில், நேற்று IIT டெல்லி பல்கலைக்கழகத்திற்கு வந்த ChatGPTயை உருவாக்கிய OPENAI நிறுவன சி.இ.ஓ சாம் ஆல்ட்மேன் அந்நிகழ்ச்சிக்கு பிறகு பிரதமர் மோடியை  சந்தித்து ஆலோசித்து உள்ளார். செயற்கை நுண்ணறிவு மூலம் இந்திய தொழில்நுட்பத்துறையில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார்.