ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா மீண்டும் சட்ட பேரவையில் தாக்கல்..!

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை இரண்டாவது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் திங்கள் மற்றும் செய்வாய் தினங்களில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு வழக்கமான சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த வருடம் ஆன்லைன் தடை சூதாட்ட தடை சட்ட மசோதா இயற்றப்பட்டது.

சட்ட மசோதா தாக்கல் :

ஆனால் நான்கு மாதங்கள் ஆகியும் ஆளுநர் கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பினார். இதனால் இரண்டாவது முறையாக இன்று ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்..

41  பேர் உயிரிழப்பு :

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்ததோடு மனமுடைந்து இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த நபர் எழுதிய கடிதத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யுமாறு எழுதியிருந்தார். ஆன்லைன் ரம்மியால் ஏற்படக்கூடிய இறப்புகளை தடுக்கும் கடைமையும் பொறுப்பும் இந்த அரசுக்கு இருக்கிறது. இணையவழி சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை வழங்குவதற்காக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு உருவாக்கப்பட்டது என்று கூறினார்.

மாணவர்கள் பாதிப்பு :

ஆன்லைன் சூதாட்டம் எந்தவித பாதிப்பை ஏற்பத்தியது என்பதை புரிந்து கொள்ள பள்ளி கல்வித்துறை ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. இந்த கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் உள்ள 2,04,114 அரசு பள்ளி ஆசிரியர்களிடம் கருத்து கோரப்பட்டது. மாணவர்களின் ஒருமுகப்படுத்தும் திறனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக 74% ஆசிரியர்கள் கூறியதாகவும் மாணவர்களின் எழுதும் திறன் மற்றும் படைப்பாற்றல் பின்னடைவு  ஏற்பட்டுள்ளதாக 64% ஆசிரியர்கள் கூறியாகவும் முதல்வர் கூறினார்.

ஆன்லைன் சூதாட்ட தடைக்கு ஆதரவு :

இதையடுத்து ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் பொதுமக்களிடம் இருந்து 10,735 மின்னஞ்சல்கள் பெறப்பட்டது. அதில் 10,708  மின்னஞ்சல்களில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு ஆதரவாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது என்று கூறினார்.

முதல்வர் உரை :

இந்நிலையில் தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்வது, இணையவழி ஒழுங்கு படுத்துதல் அவசர சட்டம் 2022, மாமன்ற உறுப்பினர்கள் முன் வைக்கப்படுவதாகவும் இனி ஒரு உயிர் பறிக்கப்படாமல், இனி ஒரு குடும்பம் நடுத்தெருவில் இருக்காமல் இந்த ஆன்லைன் சூதாட்டம் தொடராமல் இருக்க அணைத்து உறுப்பினர்களும் இந்த சட்ட முன்மொழிவை ஆதரிக்க வேண்டுமென்று முதல்வர் முக ஸ்டாலின் கூறினார்.

Leave a Comment