ப்ளூடூத் காலிங்..IP68 ரேட்டிங்குடன் அறிமுகம் ஆன நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச்கள்.? விலை என்ன தெரியுமா.?

ஸ்மார்ட் வாட்ச், வயர்லெஸ் இயர்பட்கள், புளூடூத் நெக்பேண்டுகள் போன்ற சாதனங்களை தயாரித்து சந்தைகளில் விற்பனை செய்கின்ற இந்திய நிறுவனமான நாய்ஸ் (Noise), இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்ச்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. அதன்படி, கலர்ஃபிட் ப்ரோ 5 (ColorFit Pro 5) மற்றும் கலர்ஃபிட் ப்ரோ 5 மேக்ஸ் (ColorFit Pro 5 Max) ஆகிய இரண்டு மாடல் வாட்ச்கள் அறிமுகமாகியுள்ளது.

இந்த இரண்டு வாட்ச்களும் வெவ்வேறு டிஸ்பிளே அளவைக் கொண்டுள்ளன. கலர்ஃபிட் ப்ரோ 5 ஆனது 390×450 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் 600 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்ட 1.85 இன்ச் அமோலெட் டிஸ்பிளே உள்ளது. ப்ரோ 5 மேக்ஸ்-ல் 410×502 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் 600 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்ட 1.96 இன்ச் அமோலெட் டிஸ்பிளே உள்ளது.

இரண்டு ஸ்மார்ட்வாட்ச்சிலும் 150க்கும் மேற்பட்ட கிளவுட் அடிப்படையிலான வாட்ச் பேஸ்கள் உள்ளன. அதோடு நீர் மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்க ஐபி68 ரேட்டிங் உள்ளது. இந்த வாட்ச்கள் டைமர், ஸ்டாப்வாட்ச், அலாரம், உலக கடிகாரம், ரிமைண்டர், கால்குலேட்டர், ஸ்மார்ட் டிஎன்டி மற்றும் எஸ்ஓஎஸ் ஸ்மார்ட் தொழில்நுட்பத்துடன் வருகின்றன.

ஜியோக்கு போட்டி.. நெட்ஃபிளிக்ஸ் சந்தாவுடன் ப்ரீபெய்ட் திட்டம்.! ஏர்டெல் நிறுவனம் அசத்தல்.!

பயனர்கள் ஸ்மார்ட் வாட்ச்சில் உள்ள பட்டனை ஐந்து முறை அழுத்தினால், முதலில் சேமித்து வைத்திருந்த அவசர தொடர்பு எண்ணுக்கு கால் செய்ய முடியும். சுகாதார கண்காணிப்பு அம்சங்களாக ஹார்ட் ரேட் மானிட்டர், எஸ்பிஓ2 மானிட்டர், ஸ்டெப் டிராக்கர், ஆக்டிவிட்டி ஹிஸ்டரி, ஸ்லீப் மானிட்டர், ப்ரீத் பிராக்டீஸ், ஸ்ட்ரெஸ் மெஷர்மென்ட் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன.

நிலையான இணைப்புக்காக புளூடூத் 5.3 உள்ளது. கலர்ஃபிட் ப்ரோ 5 மற்றும் கலர்ஃபிட் ப்ரோ 5 மேக்ஸ் ஆகிய இரண்டிலும் 7 நாட்கள் வரை செயலில் இருக்கக்கூடிய பேட்டரி உள்ளது. ஸ்டாண்ட்பை மோடில் 30 நாட்கள் வரை இருக்கும் என்று நாய்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இது முழு சார்ஜ் அடைய 2 மணி நேரம் ஆகும்.

கலர்ஃபிட் ப்ரோ 5 ஆனது மிட்நைட் பிளாக், விண்டேஜ் பிரவுன், சன்செட் ஆரஞ்சு, கிளாசிக் ப்ளூ, கிளாசிக் பிரவுன், எலைட் பிளாக், எலைட் ரோஸ் கோல்ட், ஆலிவ் கிரீன், ரெயின்போ வீவ் மற்றும் ஸ்டார்லைட் கோல்ட் போன்ற பத்து வண்ணங்களில் ரூ.3,999 என்ற விலையில் கிடைக்கிறது.

50எம்பி கேமரா..5,000mAh பேட்டரி.! சத்தமில்லாமல் அறிமுகமான டெக்னோவின் புதிய மாடல்.?

அதேசமயம் ப்ரோ 5 மேக்ஸ் ஆனது ஜெட் பிளாக், ஸ்பேஸ் ப்ளூ, கிளாசிக் பிளாக், கிளாசிக் பிரவுன், எலைட் பிளாக், எலைட் சில்வர், சேஜ் கிரீன் மற்றும் ஷேடோ பிளாக் நிறங்கள். எலைட் (மெட்டல்), கிளாசிக் (லெதர்), லைஃப்ஸ்டைல் (சிலிக்கான்) மற்றும் வீவ் (நிட்) போன்ற நான்கு ஸ்ட்ராப் விருப்பங்களில் ரூ.4,999 என்ற விலையில் கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச்களை இந்தியாவில் நாய்ஸ் இணையதளம், பிளிப்கார்ட், அமேசான் என அங்கீகரிக்கப்பட்ட ஆஃப்லைன் ஸ்டோர்களில் வாங்கலாம்.