இனி கவலை இல்லை..! வெள்ளம் வர்றத முன்னாடியே தெரிஞ்சிக்கலாம்.!

இந்தியா முழுவதும் ஏற்படும் வெள்ள அபாயத்தை ஒரு நாள் முன்னதாகவே கணிக்கும் வகையில், ‘ ஃப்ளட்வாட்ச் ‘ (FloodWatch) என்ற செயலியை மத்திய நீர் வளத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இது நாட்டின் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்த 7 நாட்கள் வரையிலான முன்னறிவிப்புகளை பொதுமக்களுக்கு வழங்குகிறது.

நாடு முழுவதும் உள்ள வெள்ள சூழ்நிலைகளை சரிபார்க்க முடியும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலியில், குரல் மூலமாகவும் தகவலை தெரிந்து கொள்ள முடியும்.