வடக்கு சுமத்ராவில் நிலநடுக்கம்! சுனாமி ஆபத்து இல்லை!

இந்தோனேசியாவின் அருகே வடக்கு சுமத்ராவில் இன்று (டிசம்பர் 30) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. திடீரென நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் மக்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள். இதன் பிறகு வளிமண்டலவியல் திணைக்களத்தால் சுனாமி அபாயம் இருப்பதாக  எச்சரிக்கப்பட்டிருந்தது. இது மேலும் அதிர்ச்சி கொடுத்தது. 

இந்த நிலையில், அதனை தொடர்ந்து தற்போது வடக்கு சுமத்ராவில் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக  ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு தற்போது சுனாமி அச்சுறுத்தல் இல்லை. எனவே, இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.  

ஜப்பான் கடற்கரை அருகே அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம்.!

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ” இந்த நிலநடுக்கத்தால் தற்போது சுனாமி ஆபத்து எதுவும் இல்லை. எனவே இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் கலந்தாலோசித்து இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2004-ஆம் ஆண்டு (டிசம்பர் 26)-ஆம் தேதி சுனாமி அலை ஏற்பட்டது. இந்தோனேசியாவின் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இந்த சுனாமி அலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.