சட்டப்பேரவையில் இருக்கை மாற்றியதில் எந்த வருத்தமும் இல்லை: ஓ.பி.எஸ்

சட்டப்பேரவையில் இருக்கை மாற்றியதில் எந்த வருத்தமும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருக்கை மாற்றம் செய்யப்பட்டு 2வது வரிசையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை அடுத்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக சபாநாயகர் மறுபரிசீலனை செய்து உத்தரவிட்டுள்ளார். அதிமுகவில் உட்கட்சி மோதல் வெடித்ததை அடுத்து 2022ஆம் ஆண்டு ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரித்து அவருக்கு இருக்கையை ஒதுக்க வேண்டும் என அதிமுக தரப்பில் சபாநாயகரிடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்தே இருக்கை மாற்றப்பட்டது.

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து

இந்த நிலையில் இருக்கை மாற்றம் குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர், “சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை அவர்களாகவே தந்தார்கள், அவர்களாகவே எடுத்துக் கொண்டார்கள், நான் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. அதில் எந்த வருத்தமும் இல்லை” என்று கூறினார்.

Leave a Comment