#NLC Protest : வடக்கு மண்டல ஐஜி கண்ணன் ஆய்வு..! கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட வன்முறை..!

நெய்வேலியில், அன்புமணி ராமதாஸ் கைதையடுத்து போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு அருகே உள்ள மேல்வளையமாதேவி கிராமத்தில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சுரங்கதிற்கான கால்வாய் தோண்டும் பணி  தொடங்கப்பட்டுள்ளது. விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்தும், என்எல்சி வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இன்று காலை 11 மணிக்கு நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போரட்டம் நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இந்த  போராட்டத்தின் போது பாமகவினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமகவினர் கைது செய்யப்பட்டனர். அன்புமணி ராமதாஸை விடுவிக்கக்கோரி பாமகவினர் அந்த பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, பாமகவினர் காவல்துறை வாகனத்தை கற்களை வீசி தாக்கியத்தில், வாகனத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் போராட்டாக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியும், தடியடி நடத்தியும் கலைக்க முயன்றனர். இந்த கல்வீச்சு சம்பவத்தால் 12 போலிஸாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், வாஜ்ரா வாகனம் மூலம் வானத்தை நோக்கி சுட்டனர்.

இதனை தொடர்ந்து, போர்க்களம் போல் காட்சியளிக்கும் என்எல்சி நுழைவு வாயில் காட்சியளித்த நிலையில், வடக்கு மண்டல ஐஜி கண்ணன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.  அன்புமணி ராமதாஸ் கைதையடுத்து போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. என்.எல்.சி நிறுவனத்தின் அனைத்து  நுழைவு வாயில்களும் மூடப்பட்டுள்ளது.