5 முக்கிய இடங்களில் பதற்றம்! தீவிர சோதனையில் என்ஐஏ அதிகாரிகள்! லேப்டாப், பென்ட்ரைவ்கள் பறிமுதல்!

கடந்த வாரம் உளவுத்துறை ஆனது,  லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பில் இருந்து 6 பயங்கரவாதிகள் இலங்கை வழியாக தமிழ்நாட்டிற்குள் ஊடுருவியதாக தகவல் அளித்திருந்தது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக கோயம்புத்தூரில் தற்போதும் தீவிர சோதனை நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்று 20 என்ஐஏ அதிகாரிகள் கோயம்புத்தூரில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுவரை 15 வீடுகளில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை முடிந்தும் எந்த போலீஸ் அதிகாரிகளும் வீட்டை விட்டு வெளியேற வில்லை அதனால் கூடுதல் பதற்றம் நிலவுகிறது. மேலும் சந்தேகப்படும்படியாக லேப்டாப், பென்ட்ரைவ் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கோயம்புத்தூரில் முக்கிய ஐந்து இடங்களில்  குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்த திட்டமிட பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனால், கோவை முக்கிய பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் இந்த சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் கோவை முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.