காவல்துறையில் புதிய தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்படும் – டிஜிபி சங்கர் ஜிவால் பேட்டி

ரவுடிகளுக்கு எதிராகவும், கள்ளசாராயத்திற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என  டிஜிபியாக பதவியேற்ற பின் சங்கர் ஜிவால் பேட்டி. 

தமிழக காவல்துறையின 32-வது டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்றார். பொறுப்புகளை சங்கர் ஜிவாலிடம் ஒப்படைத்தார் முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு. சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தற்போது புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ளார்.

பதவியேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிஜிபி சங்கர் ஜிவால், தமிழ்நாடு காவல்துறையில் புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்ட உள்ளது; காவல்துறையில் போதுமான காவலர்கள் நியமிக்க திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்; காவல்துறையில் புதிய தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்படும் என  தெரிவித்துள்ளார்.

மேலும், ரவுடிகளுக்கு எதிராகவும், கள்ளசாராயத்திற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும். காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவு ஏற்படுத்த பாடுபடுவேன். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியாக உள்ளது என  தெரிவித்துள்ளார்.