பாலியல் குற்றவாளிகளை கண்டறிய புதிய அதிரடிப்படை.! பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு.!

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க பிரதமர் ரிஷி சுனக் சிறப்பு படை ஒன்றை உருவாக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகளை கண்டறிந்து, அவர்களுக்கு உரிய தண்டனையை உறுதி செய்ய புதிய அதிரடிப்படை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பாலியல் குற்றங்களை தடுக்க புதிய அதிரடிப் படையை உருவாக்கும் திட்டத்தை இங்கிலாந்து பிரதமர் தொடங்கி வைத்தார்.

அதன்படி, பெண்கள் மற்றும் இளம் பெண்களைப் பாதுகாப்பதற்காக அனுபவம் வாய்ந்த அதிகாரிகளைக் கொண்ட இங்கிலாந்தின் தேசிய குற்றவியல் அமைப்பின் (NCA) மையத்தில் பணிபுரியும் ஒரு புதிய அவசர பணிக்குழுவை அறிவித்தார்.

இதன்பின் பேசிய பிரதமர் ரிஷி சுனக், இனவெறி, மதவெறி குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சி, பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது தவறு, குற்றம் செய்தவர்கள் இனி தப்பி முடியாது. சமூகங்களில் உள்ள சுரண்டலை வேரறுக்க அதிகாரிகள் மற்றும் நிபுணர்க செயல்பட வேண்டும் என்றும் எங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை விட முக்கியமானது எதுவுமில்லை எனவும் தெரிவித்தார்.

Leave a Comment