5 பேர் உயிரிழப்பு.! கோவில் குளம் அறநிலையதுறை கட்டுப்பாட்டில் இல்லை.! அமைச்சர் சேகர்பாபு விளக்கம்.!

5 பேர் உயிரிழந்த மூவரசம்பட்டு கோவில் குளம் அறநிலையதுறை கட்டுப்பாட்டில் இல்லை என அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். 

நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சென்னை, மூவரசம்பட்டில் உள்ள கோவில் குளத்தில் நடந்த தீர்த்தவாரி நிகழ்வின் போது 5 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சோக நிகழ்வுக்கு இன்று சட்டப்பேரவையில் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கவன ஈர்ப்பு தீர்மானம் :

இந்த மௌன அஞ்சலியை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதில் , இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு அறிவித்த 2 லட்ச ரூபாய் அபராதம் போதாது. 10 லட்சம் நிவாரண தொகை அளிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

அமைச்சர் சேகர்பாபு பதில் :

மேலும், தமிழகத்தில் உள்ள கோவில் குளங்களை அரசு முறையாக தூர்வார வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானத்தில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த கோரிக்கை குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு குறிப்பிடுகையில்,

அறநிலையத்துறை :

சம்பவம் நிகழ்ந்த மூவரசம்பட்டு கோவில் நிலமானது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லை. இனி வரும்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

நடவடிக்கைகள் :

மேலும், இனி தனியார் அமைப்புகள் மூலம் தீர்த்தவாரி நிகழ்வுகள் நடைபெறும் போது, அதனை அரசுக்கு தெரிவித்து விட்டு தான் நடத்த வேண்டும் எனவும் அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் இபிஎஸ் எழுப்பிய கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் கூறினார்.

Leave a Comment