அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நெஞ்சு வலி..! மருத்துவமனையில் அனுமதி..!

கடந்த ஜூன் 13-ஆம் தேதி நள்ளிரவில் அமலாத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்படி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் அங்கு அவருக்கு  பைபாஸ் சர்ஜரி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 21-ஆம் தேதி அதிகாலை இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு இருதயத்துக்கு செல்லும் ரத்த குழாய்களில் 4 அடைப்புகள் இருந்ததால் பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது.

இதனையடுத்து, அவர் ஜூலை 17 ஆம் தேதி காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட உடனே செந்தில் பாலாஜி ஆயுதப்படை போலீசாரின் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இதனை தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் உள்ள நிலையில்,  உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜி ரத்த கொதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.