தெலுங்கானாவில் 21 முதல் 40 வயதுடைய ஆண்களுக்கு அதிக கொரோனா பாதிப்பு.!

21-40 வயதுடைய தெலுங்கானாவின் கொரோனா நோயாளிகளில் கிட்டத்தட்ட பாதி ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தெலுங்கானாவில்அதிகமான எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்புகளில்  ஆண்கள் அதிகமாக உள்ளனர். இதில் கிட்டத்தட்ட பாதி நோயாளிகள் 21-40 வயதுக்குட்பட்டவர்களில் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 10.9 சதவீதம் பேர் உயர் ஆபத்து பிரிவில் உள்ளனர்.

நேற்று வெளியிடப்பட்ட தகவல்களின்படி, மொத்த 58,906 தொற்றுகளில் 65.6 பாலின மூலம் ஆண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் 34.4 சதவீதமாக உள்ளனர்.

22.1 சதவிகித கொரோனா தொற்று 21-30 வயதுக்குட்பட்டவையாகும், ஆண்கள் 14.1 சதவிகிதமாக உள்ளனர், 25 சதவிகித கொரோனா தொற்று 31-40 வயதிற்குட்பட்டவை என்று கடந்த செவ்வாய்கிழமை கொரோனா புல்லட்டின் தெரிவித்துள்ளது .

வயதான மக்களில், 51-60 வயதுக்குட்பட்டவர்கள் 14.7 சதவீதமும், 61-70 வயதுக்குட்பட்டவர்கள்  7.7 சதவீதமும் உள்ளனர். 71-80 வயதுக்குட்பட்ட நோயாளிகள் 2.6 சதவீத நோயாளிகளாகவும், 81 வயதிற்கு மேற்பட்டவர்கள் 0.6 சதவீதமாகவும் உள்ளனர்.

.