பசுவின் சாணம், மூத்திரம் ஆகியவற்றை திறம்பட பயன்படுத்த நடவடிக்கை.! நிதி ஆயோக் பரிந்துரை.!

விவசாயம் மற்றும் எரிசக்தி துறைகளில் பசுவின் சாணம் மற்றும் மாட்டு மூத்திரத்தை திறம்பட பயன்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி ஆயோக்  பரிந்துரை செய்துள்ளது. 

மத்திய அரசின் நிதி ஆயோக் குழுவானது, நேற்று (வெள்ளிக்கிழமை) , கால்நடைகளின் குறிப்பாக பசுக்கள் வளர்ப்பு பற்றியும் அதன் மூலம் வரும் பொருளாதார மேம்பாடு குறித்தும் கலந்து ஆலோசித்து. பசு வளர்ப்பில் சிறப்பு கவனம் செலுத்தி கரிம மற்றும் இயற்கை உரங்களின் உற்பத்தி மற்றும் ஊக்குவிப்பு பற்றியும் நிதி ஆயோக் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து, நிதி ஆயோக் மூத்த ஆலோசகர் டாக்டர் நீலம் படேல், NITI ஆயோக் பணிக்குழுவின் உறுப்பினர்கள்,  செயலர் ஆகியோர், ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பாளர்களுக்கு விளக்கினர்.

இந்தியாவின் பாரம்பரிய விவசாய முறையின் முக்கிய அங்கமாக கால்நடைகள் இருந்தன. இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதில் பசுக்கள் பெரும் உதவியாக இருக்கும். கால்நடைகளின் கழிவுகளான மாட்டு சாணம் மற்றும் மாட்டு மூத்திரம் ஆகியவற்றிலிருந்து உருவாக்கப்பட்ட விவசாய பொருட்கள் மூலம்  விவசாயத்தில் இரசாயனங்களைக குறைக்கலாம், மாற்றலாம். தாவர ஊட்டச்சத்து மற்றும் தாவர பாதுகாப்பு அதன் மூலம் பொருளாதார வளர்ச்சி, சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை காரணங்கள் குறித்தும், டாக்டர் படேல் விளக்கினார்.

Leave a Comment