இந்தியாவில் குரங்கு அம்மை தொற்று : 10 பேரின் ரிசல்ட் என்னவாயிற்று.?!

மஹாராஷ்டிராவில் குரங்கு அம்மை அறிகுறிகள் கண்டறியப்பட்ட 10 பேருடைய மாதிரிகள் சோதனையிட்டத்தில் 9 பேருக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. 

தற்போது மக்களை லேசாக பயமுறுத்திய ஓர் செய்தி என்றால் அது குரங்கு அம்மை தொற்று தான். இதுவும் கொரோனா தொற்று போல, நோய் தொற்று உள்ளவரை தொடுவதாலோ, அவர்களுடன் தொடர்பில் இருந்தாலோ பரவும் அபாயம் இருக்கிறது.

ஏற்கனவே இந்தியாவில் 4 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியாக இருந்தது. அதனை தொடர்ந்து, மஹாராஷ்டிரா மாநிலத்தில் குரங்கு அம்மை அறிகுறிகள் கண்டறியப்பட்ட 10 பேருடைய மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதில் 9 பேருக்கு குரங்கு அம்மை இல்லை என முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், ஒருவருக்கு மட்டும் அடுத்தகட்ட சோதனைக்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Comment