மதுரை எய்ம்ஸ் … மத்திய அமைச்சர் கூறுவது பிரமாண்ட பொய்.! மா.சுப்பிரமணியன் விமர்சனம்.!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் நேற்று எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது மத்திய நிதியமைச்சர் சீதாராமன் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் பற்றி குறிப்பிட்டார்.

மதுரை எய்ம்ஸ் கட்டுவதற்கு தாமதமாவதற்கு காரணம் தமிழக அரசுதான். தமிழக அரசே நிலம் கையகபடுத்துவதில் தாமதம் ஏற்படுத்துகிறது. அதன் காரணமாகத்தான் எய்ம்ஸ் மருத்துவமனையில் கட்டுமான பணிகள் தாமதமாக நடைபெறுகின்றன என்று கூறினார்.

மத்திய நிதியமைச்சரின் மதுரை எய்ம்ஸ் பற்றிய கருத்துக்கு தமிழக மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் நேற்று சென்னையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறுகையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய தகவல்கள் உண்மைக்கு புறம்பான தகவல்கள். மத்திய அமைச்சராக பொறுப்பில் இருப்பவர்கள் இப்படி மக்களை குழப்பம் அடைய செய்யக்கூடாது. அவர் வாய் கூசாமல் பொய் சொல்கிறார்.

அதாவது பிரம்மாண்ட பொய் என்று சொல்லும் அண்டப்புளுகு புளுகுகிறார். என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.  மத்திய பாஜக அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு ஏழு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்தது அதில் உத்திர பிரதேசம், அசாம், ஜம்மு காஷ்மீர், தமிழ்நாட்டின் மதுரை உள்ளிட்ட ஏழு இடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.