இந்தியா

ஹத்ராஸில் பறிபோன 121 உயிர்கள்.. ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல்!!

உத்தரப்பிரதேசம் : ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 121 உயிர்கள் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. தற்பொழுது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து பேசினார்.

உ.பி.யின் ஹத்ராஸ் மாவட்டத்தில் கடந்த ஜூலை 2ஆம் தேதி போலே பாபாவின் ஆன்மிக கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அலிகாரில் உள்ள பிலக்னா கிராமத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். டெல்லியில் இருந்து அதிகாலையில் புறப்பட்ட ராகுல், சாலை மார்க்கமாக உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸுக்கு பயணம் செய்தார்.

இந்த சம்பவம் நடந்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் அந்த இடத்துக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். அங்கு ராகுல் காந்தியுடன் மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே, அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷிரினேட் உள்ளிட்ட நிர்வாகிகள் வருகை தந்தனர்.

உயிரிழந்த குடும்பத்தினரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், “நிறைய குடும்பங்கள் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை, விழா ஏற்படும் செய்யும் அமைப்பில் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. மிகவும் ஏழ்மையான குடும்பங்கள் என்பதால் அவர்களுக்கு அதிக இழப்பீடு கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன், உத்தரப்பிரதேசம் முதல்வரை மனம் திறந்து இழப்பீடு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Recent Posts

குளத்தில் குளிக்காதீங்க.. மூளையை தின்னும் அமீபா! அரசு கடும் எச்சரிக்கை.!

சென்னை : அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்னும் அரியவகை மூளை தொற்றுநோய் பரவல் தொடர்பாக, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த…

18 mins ago

உலகநாயகனுக்கு இந்தியன் 1க்கு கிடைத்த பெருமைகள் இந்தியன் 2வில் கிடைக்குமா.?

இந்தியன் : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை 12-ஆம் தேதி வெளியாகிறது. முதல் பாகம்  அளவிற்கு இருக்குமா? என்று தான் பலரும்…

23 mins ago

மும்பை கனமழை : பள்ளி கல்லூரிகள் விடுமுறை … மீட்புப்பணிகள் தீவிரம் …!

மும்பை : மும்பை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் அதிகனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில்…

35 mins ago

இன்று அதிகாலை புத்தமத வழக்கப்படி ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம்.!

சென்னை: பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலானது பொத்தூரில் இன்று அதிகாலை 1 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 5) அன்று…

52 mins ago

அபிஷேக் – ருதுராஜ் அசத்தல்..! விட்டதை பிடித்த இந்திய அணி …100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ZIMvsIND : இன்று நடைபெற்ற இந்தியா-ஜிம்பாப்வே அணி இடையேயான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியா, ஜிம்பாப்வே…

14 hours ago

மக்களே ..! நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் ..!

மின்தடை  : நாளை ( ஜூலை 8/7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம். வடக்கு கோவை துடியலூர், வடமதுரை, அப்பநாயக்கன்பாளையம்,…

20 hours ago