ஐபிஎல் போன்று ஹாக்கி ஃபேன் பார்க்.! தமிழகத்தில் 40 இடங்களில் சிறப்பு ஏற்பாடு.!

இந்தியா, சீனா, பாகிஸ்தான் , ஜப்பான், மலேசியா, தென் கொரியா உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய ஆடவர் ஆக்கி போட்டி இன்று  (ஆகஸ்ட் 3) முதல் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரையில் சென்னையில் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற உள்ளது.

தினமும் 4, 6, 8.30 மணிக்கு என மொத்தம் 3 போட்டிகள் நடைபெற உள்ளன . இந்த போட்டியை காண அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச ஏற்பாடு செய்யப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார்.

அதன்படி, தற்போய்து ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் , ஏற்க்கனவே சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டியின் போது மாற்றுத்திறனாளிகளுக்கு  சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது போல, தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு என சிறப்பு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதே போல, ஐபிஎல் போட்டியின் போது, தமிழக்த்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போட்டியை நேரடியாக பார்க்கும்படி செய்யப்பட்டு இருந்த ஃபேன்ஸ் பார்க் இடம் போல , ஆசிய ஹாக்கி போட்டியை காண தமிழகத்தில் 40 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.