மேகாலயத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம்..!

மேகாலயத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

மேகாயலத்தில் நொங்போ என்ற பகுதி உள்ளது. இன்று அதிகாலை 5.21 மணியளவில் இந்த பகுதியிலிருந்து வடகிழக்கே 33 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியே 5 கி.மீ. ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.2 ஆக  பதிவாகியுள்ளது.