போதைப் பொருட்கள் ஒழிப்பில் அனைவரும் கைக்கோத்திடுவோம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

போதைப் பொருட்கள் ஒழிப்பில் அனைவரும் கைக்கோத்திடுவோம் என முதல்வர் ட்வீட். 

சென்னையில் போதைப்ஏ பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு குறும்பட போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘போதைப்பொருட்கள் ஒழிப்பில் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுடன் விழிப்புணர்வுக்கான பரப்புரைகளைச் செய்திட வேண்டுமெனத் தொடர்ந்து கூறிவருகிறேன். இத்தகைய குறும்படங்களால் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட முடியும். பாராட்டுகள்! போதைப் பொருட்கள் ஒழிப்பில் அனைவரும் கைக்கோத்திடுவோம்!’ என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment