நள்ளிரவில் ரசிகர்களை குஷி படுத்திய லியோ படக்குழு! இன்று மாலை செகண்ட் சிங்கிள் வெளியீடு!!

நேற்று மாலை லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து நள்ளிரவு அதற்கான ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டது.

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவர காத்திருக்கும் ‘லியோ’ திரைப்படம் குறித்து அப்டேட் எப்போடா வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு படக்குழு நேற்று மாலை சர்ப்ரைஸ் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, லியோ திரைப்படத்தின் இரண்டாம் பாடல் வெளியாகிறது என படக்குழு அறிவித்தது.

இது ரசிகர்களுக்கு ஆறுதல் பரிசாக அமைந்தது, இதனையடுத்து பாடல் எத்தனை மணிக்கு வெளியாகும் என படக்குழு நள்ளிரவு 12 மணிக்கே அறிவித்து ரசிகர்களை மேலும் குஷியாக்கியது. ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட செகண்ட் சிங்கிளின் போஸ்டர் நேற்று வெளியான நிலையில், “Badass” என்று தொடங்கும் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு ப்ரோமோ வீடியோ மூலம் தெரிவித்துள்ளது.

 

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பாடல் வெளியாக காத்திருப்பதாக ரசிகர்கள் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், செப்டம்பர் 30ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றெல்லாம் கூறப்பட்டிருந்தது.

ஆனால், இந்த இசை வெளியீட்டு விழாவை நடத்தப் போவதில்லை என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால், ரசிகர்கள் பெரிதும் அப்செட் ஆனார்கள், பலரும் புலம்பிக்கொண்டே சமூக வலைத்தளங்களில் இது குறித்து பல கோணத்தில் விவாதித்தனர். இந்த தருணத்தில் தான், லியோ படக்குழு படத்தின் இரண்டாம் பாடலான “Badass” பாடல் இன்று வெளியாகிறது என அறிவித்துள்ளது.

இந்த பாடல் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில், பாடல் எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக்கி உள்ளது. மேலும், இந்த இனி அடுத்தடுத்த நாட்கள் லியோ படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.