பாகிஸ்தானில் காலிஸ்தான் தீவிரவாதி லக்பீர் சிங் ரோட் மரணம்… வெளியான தகவல்!

பாகிஸ்தானில் காலிஸ்தான் தீவிரவாதி லக்பீர் சிங் ரோட் மாரடைப்பால் காலமானார் என தகவல் வெளியாகியுள்ளது. தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தின் தலைவரும், இந்தியாவால் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டவருமான லக்பீர் சிங் ரோட் (வயது 72) காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1985ம் ஆண்டு ஏர் இந்தியா ஜெட் கனிஷ்கா மீது குண்டுவெடித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான காலிஸ்தானி பயங்கரவாதி லக்பீர் சிங் ரோட் மாரடைப்பால் பாகிஸ்தானில் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. லக்பீர் சிங், தடை செய்யப்பட்ட காலிஸ்தான் விடுதலை படை மற்றும் சர்வதேச சீக்கிய இளைஞர் சம்மேளனத்தின் (ISYF) தலைவரும், காலிஸ்தானி தீவிரவாதி ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேவின் மருமகனும் ஆவார்.

அதாவது, லக்பீர் சிங், 1984ல் பொற்கோயிலுக்குள் கொல்லப்பட்ட ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. லக்பீர் சிங்கின் சகோதரரும், முன்னாள் அகல் தக்த் ஜத்தேதாருமான ஜஸ்பிர் சிங் ரோட், லக்பீர் சிங் இறந்ததாகவும், இறுதிச் சடங்குகள் நேற்று முடிந்ததாகவும் உறுதி செய்தார்.

அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

UA(P)A-இன் கீழ் ‘தனிநபர் பயங்கரவாதி’ என்று தடை செய்யப்பட்ட தீவிரவாத பட்டியலில் சேர்க்கப்பட்டதால் லக்பீர் சிங் ரோட் பாகிஸ்தானுக்கு தப்பியோடிவிட்டார். சமீபத்தில், மொஹாலியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம், பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் உள்ள லக்ஷ்பீர் சிங்கிற்கு சொந்தமான நிலத்தை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் பிரிவு 33 (5) இன் கீழ் நிலத்தை பறிமுதல் செய்ய  உத்தரவிட்டது.

லக்பீர் சிங் இந்தியாவில் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐஎஸ்ஐ உடன் நெருக்கமாக பணியாற்றினார். சமீபத்திய ஆண்டுகளில் பஞ்சாப்பில் நடந்த டிபன் வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடையவர். இதுபோன்று, 2021 ஆம் ஆண்டு லூதியானா கோர்ட் குண்டுவெடிப்பின் முக்கிய சதிகாரரும் லக்பீர் சிங் ஆவார்.

அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கைபடி, லக்பீர் சிங்கின் ISYF ஒரு தீவிர பயங்கரவாத அமைப்பாகும். லஷ்கர்-இ-தொய்பா (LeT) உள்ளிட்ட இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது. இந்தியாவில் மார்ச் 22, 2002 அன்று பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (POTA) கீழ் ISYF தடை செய்யப்பட்டது.

2001 ஆம் ஆண்டு UK பயங்கரவாதக் குழுவைத் தடை செய்தது. இங்கிலாந்தில் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குழு அதன் பெயரை சீக்கிய கூட்டமைப்பு-யுகே (SFUK) என மாற்றியது. சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பின் (ISYF ) தலைவரான லக்பீர் சிங், அந்த அமைப்பை 1984 ஆம் ஆண்டு நிறுவினார் என்றும் இந்த அமைப்பு கனடா மற்றும் இங்கிலாந்தில் செயல்பாட்டில் உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.